கோவை, ஈரோட்டில் உச்சம்பெற்று வரும் கொரோனா : இன்று ஒரே நாளில் 1,985 பேருக்கு பாதிப்பு

Author: Babu Lakshmanan
6 August 2021, 9:02 pm
Corona Vaccine - Updatenews360
Quick Share

சென்னை : தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்றும் 2 ஆயிரத்தை நெருங்கியே உள்ளது.

கொரோனாவின் 2வது அலை பரவத் தொடங்கியதால் பாதிப்பு எண்ணிக்கை கடந்த சில நாட்களாக குறைந்து வந்தது. ஆனால், கடந்த சில தினங்களாக சராசரி பாதிப்பு அதிகரித்தே காணப்படுகிறது. இன்றும் 2,000-ஐ நெருங்கிய பாதிப்புகளே இருந்து வருகின்றன. அதாவது, 1,985 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,71,383ஆக அதிகரித்துள்ளது.

அதிகபட்சமாக, கோவையில் இன்று 239 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் 189 பேருக்கும், செங்கல்பட்டுவில் 122 பேருக்கும், ஈரோட்டில் 178 பேருக்கும், தஞ்சையில் 93 பேருக்கும் உறுதியாகியுள்ளது.

தமிழகத்தில் இன்று 30 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 34,260ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 1,985 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதுவரையில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 25 லட்சத்து 16 ஆயிரத்து 938ஆக அதிகரித்துள்ளது.

Views: - 346

0

0