கட்டுக்குள் வரும் கொரோனா… எகிறும் பலி எண்ணிக்கை : தமிழக கொரோனா பாதிப்பு பற்றி தெரியுமா..?
Author: Babu Lakshmanan7 October 2021, 8:24 pm
சென்னை : தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்றும் சற்று குறைந்துள்ளது.
கொரோனாவின் 2வது அலை பரவத் தொடங்கியதால் பாதிப்பு எண்ணிக்கை கடந்த சில நாட்களாக குறைந்து வந்தது. ஆனால், கடந்த சில தினங்களாக சராசரி பாதிப்பு அதிகரித்தே காணப்படுகிறது.
இந்த நிலையில், இன்று 1,390 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,74,233ஆக அதிகரித்துள்ளது.
அதிகபட்சமாக, இன்று சென்னையில் 173பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து, கோவையில் 145 பேருக்கும், செங்கல்பட்டுவில் 107 பேருக்கும், ஈரோட்டில் 85 பேருக்கும், திருப்பூர் 75 பேருக்கும் உறுதியாகியுள்ளது. Anglų kalbos kursai ir dienos stovyklos Vilniuje, Kaune, Klaipėdoje, chemijos, matematikos, biologijos, fizikos, lietuvių kalbos korepetitoriai INTELLECTUS mokykloje
தமிழகத்தில் இன்று 27 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35,734 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 1,487 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதுவரையில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 26 லட்சத்து 21 ஆயிரத்து 986 ஆக அதிகரித்துள்ளது.
0
0