கொரோனா இல்லாத முதல் மாவட்டமானது பெரம்பலூர் : தமிழக மக்களிடையே மேலும் அதிகரிக்கும் நம்பிக்கை..!!

17 November 2020, 1:25 pm
Cbe Coronaa- Updatenews360
Quick Share

சென்னை : தமிழகத்தில் கொரோனா வைரஸ் இல்லாத முதல் மாவட்டமாக பெரம்பலூர் உருவெடுத்துள்ளது.

தமிழகத்தில் வேகமாக பரவி வந்த கொரோனா தொற்று, தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகங்களின் தடுப்பு நடவடிக்கையினால் நாளுக்கு நாள் கட்டுக்குள் வந்துள்ளது. தினசரி பாதிப்பு தற்போது 2 ஆயிரத்திற்கும் குறைவாகவே இருந்து வருகிறது. சென்னை, செங்கல்பட்டு, கோவை உள்ளிட்ட மாவட்டங்களைத் தவிர்த்து எஞ்சிய மாவட்டங்களில் 100க்கும் குறைவான பாதிப்புகளே இருந்து வருகின்றன.

இந்த நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இல்லாத முதல் மாவட்டமாக பெரம்பலூர் மாவட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 2,228 பேரும் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகிவிட்டனர். நேற்று யாருக்கும் கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்படவில்லை என அம்மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுவரை அங்கு கொரோனாவுக்கு 21 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் கொரோனா தொற்று கட்டுக்குள் வரும் நிலையில், கொரோனா இல்லாத மாவட்டமாக பெரம்பலூர் மாவட்டம் உருவாகியுள்ளது. இதனால், விரைவில் கொரோனா இல்லாத தமிழகம் உருவாகும் என்ற நம்பிக்கை பொதுமக்களிடையே எழுந்துள்ளது.

Views: - 22

0

0