முழு ஊரடங்கில் அம்மா உணவகங்களுக்கு க்ரீன் சிக்னல்.. டாஸ்மாக்கிற்கு ரெட் சிக்னல்..!!

8 May 2021, 10:30 am
amma unavagam 1- updatenews360
Quick Share

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க வரும் மே 10ஆம் தேதி முதல் விதிக்கப்பட்ட முழு ஊரடங்கில் அம்மா உணவகம் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் எடுத்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் ஒரு நாள் பாதிப்பு 26 ஆயிரத்தை தாண்டி வருகிறது. இதை கட்டுப்படுத்த தமிழக அரசு வரும் மே 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த ஊரடங்கின் போது பல்வேறு கட்டுப்பாடுகளும், சில வழிகாட்டு விதிமுறைகளுடன் சிலவற்றை இயங்க அனுமதியும் அளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, முழுஊரடங்கின் போது உணவு விநியோகம், மளிகை பொருட்கள் உள்ளிட்டவற்றை விநியோகம் செய்யும் ஆன்லைன் நிறுவனங்களின் சேவைகளுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. உணவகங்கள் ஏற்கனவே அறிவித்த நேரங்களில் மட்டும் பார்சல் உணவுகளை வழங்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதி கிடையாது என அறிவித்துள்ள தமிழக அரசு, அம்மா உணவகங்கள் தொடர்ந்து இயங்கும் என தெரிவித்துள்ளது.

Views: - 155

0

0