பாதிப்பிலும், பலியிலும் ஒருசேர செல்லும் கோவை, சென்னை : இன்று 1700க்கு கீழான தமிழக கொரோனா பாதிப்பு..!!

Author: Babu Lakshmanan
27 September 2021, 7:38 pm
Malaysia Corona - Updatenews360
Quick Share

சென்னை : தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

கொரோனாவின் 2வது அலை பரவத் தொடங்கியதால் பாதிப்பு எண்ணிக்கை கடந்த சில நாட்களாக குறைந்து வந்தது. ஆனால், கடந்த சில தினங்களாக சராசரி பாதிப்பு அதிகரித்தே காணப்படுகிறது. இந்த நிலையில், இன்று 1,657 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,58,923ஆக அதிகரித்துள்ளது.

அதிகபட்சமாக, இன்று கோவையில் 189 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து, சென்னையில் 186 பேருக்கும், செங்கல்பட்டுவில் 113 பேருக்கும், ஈரோட்டில் 117 பேருக்கும், திருப்பூரில் 84 பேருக்கும் உறுதியாகியுள்ளது.

தமிழகத்தில் இன்று 19 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35,509 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 1,662 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதுவரையில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 26 லட்சத்து 06ஆயிரத்து 153 ஆக அதிகரித்துள்ளது.

Views: - 106

0

0