மறைந்து போகும் ‘அடி முறை‘! பறை சாற்ற ‘பட்டாஸ்‘ பட சண்டை பயிற்சியாளர் கோரிக்கை!!

14 September 2020, 1:49 pm
Quick Share

கன்னியாகுமரி : உலக தற்காப்பு கலையான தமிழர்களின் பாரம்பரிய அடி முறையை சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் சேர்க்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கஅடிமுறை ஆசானுன் களரி செல்வராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆய கலைகள் 64 ல் உள்ள நம் பாரம்பரிய கலைகளில் தற்காப்பு கலைகள்தான் உலகில் உள்ள அனைத்து தற்காப்பு கலைகளுக்கும் மூலகாரணம் என்பது உலகறிந்த உண்மை. இதனை மையமாக வைத்தே களரி, குங் ஃபு, கராத்தே மற்றும் வர்மக் கலைகள் கையாளப்படுகின்றன.

சுவடு, கை போர் , ஷைலாத், எடுத்தெறி, கூட்டு பிரிவு மல்லு ஆயுத பெருக்கம் போன்ற அனைத்தும் அடி முறையை மையமாக வைத்து விளையாடப்படுகின்றன. ஆயுத பெருக்கத்தின் கீழ் ஒற்றை வாள் ரெட்டைவாள். கண்ட கோடாரி குறுந்தடி போன்றவை உள்ளன.

பாரம்பரியமிக்க அடிமுறை கலைகளின் பூர்வீகம் கன்னியாகுமரி மாவட்டம். புகழ்பெற்ற ஆசான்களின் பிறப்பிடமாக இங்கிருந்து தான் பரவியது. பாரம்பரியமிக்க இந்த அடிமுறை கலையை சர்வதேச போட்டிகளில் சேர்த்து மத்திய மாநில அரசுகள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், அனைத்து பள்ளிகளிலும் இதனை ஒரு பாடமாக வைத்து மாணவ மாணவர்களுக்கு அடிமுறை கலைகளைப் பற்றி புரிதலை ஏற்படுத்த வேண்டும் என ‘பட்டாஸ்‘ பட சண்டை பயிற்சியாளர் களரி செல்வராஜ் வலியுறுத்தியுள்ளார்.

அடிமுறை கலை என்பது தற்காப்பு கலை மட்டுமல்ல ஒவ்வொரு மாணவரும் தனது உடம்பை நோய் நொடியில் இருந்து பாதுகாக்க முக்கியமான பயிற்சிகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது என்றும், கொரோனா காலத்தில் யோகா எப்படி பயனுள்ளதாக கருதபட்டதோ அதுபோலதான் அடிமுறை கலையும் நோய் எதிர்ப்பு சக்தியை வளர்க்க பயன்பட்டதாகவும் கூறினார்.

இதுபோன்று இந்த பயிற்சியில் ஈடுபட்டு வரும் மாணவர்கள் கூறும்போது இதனை செய்வதால் உடல் ஆரோக்கியமாக இருப்பதாகவும் இதுவரை கொரானாவால் எந்தவிதமான பாதிப்பும் தங்களுக்கு ஏற்பட்டதில்லை என்று கூறுகின்றனர். எனவே மத்திய மாநில அரசுகள் இந்த கலையை சர்வதேச விளையாட்டு போட்டியில் சேர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இவர்களது கோரிக்கையாக உள்ளது.

Views: - 12

0

0