அக்.,9ம் தேதி அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது: உள்மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!

Author: Babu
5 October 2020, 2:35 pm
Rain In TN - Updatenews360
Quick Share

சென்னை : அடுத்த 48 மணிநேரத்தில் தமிழக உள் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- வெப்பச்சலனம், வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, அடுத்த 48 மணிநேரத்திற்கு தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நீலகிரி, கோவை உள்ளிட்ட உள் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

அக்.,9ம் தேதி அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இதனால், குமரிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும்.

சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது, எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 50

0

0