அதிகரித்த சொந்த வரி வருவாய்..! வளர்ச்சியை நோக்கி பீடுநடை போடும் தமிழகம்..!

3 October 2020, 12:48 pm
Economic_Growth_UpdateNews360
Quick Share

கடன்களைத் தவிர்த்த தமிழ்நாட்டின் நிதிப் பற்றாக்குறை ஜூலை மாதத்தில் 2,605.34 கோடியாக குறைந்துள்ளது. இதன் மூலம் மாநிலத்தின் சொந்த வருவாய் வளர்ச்சியை நோக்கிச் செல்வது தெளிவாக தெரிகிறது.

இதன் மூலம் 2020-21 நிதியாண்டில் ஜூலை வரை தமிழகம் ஒட்டுமொத்த நிதிப் பற்றாக்குறையை, 21,833.48 கோடியாகக் கொண்டுள்ளது என்று சிஏஜி வெளியிட்ட தற்காலிக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

மாநிலத்தின் மொத்த ரசீதுகள் ஜூலை மாதத்தில் சுமார் 19.4% அதிகரித்து 14,041.25 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. மாநிலத்தின் சொந்த வரி வருவாய் கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் 7,765.15 கோடியாக இருந்த நிலையில் இந்த ஆண்டு சுமார் 8% அதிகரித்து, 8,387.23 கோடியாக இருந்தது.

மாநிலத்தின் சொந்த வரி வருவாயில் (எஸ்ஓடிஆர்), மாநில சரக்கு மற்றும் சேவை வரி (எஸ்ஜிஎஸ்டி) ஜூலை மாதத்தில் 27% அதிகரித்து 2,997.84 கோடியாக இருந்தது. இது ஜூலை 2019’இல் 2,360.40 கோடியாக உள்ளது.

மற்றொரு எஸ்ஓடிஆரான மாநில கலால் வரிகள், ஜூலை மாதத்தில் சுமார் 18.5% அதிகரித்து 696.57 கோடி டாலராக இருந்தது. இது 2019 ஜூலையில் 587.65 கோடியாக உள்ளது. அதே நேரத்தில்பெட்ரோல், டீசல் மற்றும் மதுபானம் மீதான வாட் அடங்கிய விற்பனை வரி 3,820.27 கோடியிலிருந்து 4,013.21 கோடியாக உயர்ந்துள்ளது.

மத்திய அரசிலிருந்து தமிழகத்திற்கு கிடைத்த வரிகளில் மாநிலத்தின் பங்கு சுமார் 8.4% அதிகரித்து ஜூலை மாதத்தில் 1,757.96 கோடியாக அதிகரித்துள்ளது. இது 2019 ஜூலையில் 1,622.04 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும், வருவாய் செலவினங்களின் சில கூறுகள், சம்பளம் மற்றும் ஊதியங்கள் மற்றும் மானியங்களுக்கான செலவுகள் போன்றவை இன்னும் தொகுக்கப்பட்டவில்லை என சிஏஜி தெரிவித்துள்ளது.

உள்கட்டமைப்பு மற்றும் பிற வளர்ச்சித் திட்டங்களுக்குச் செல்லும் மூலதனச் செலவு, ஜூலை மாதத்தில் சுமார் 24.5% அதிகரித்து 1,622.91 கோடியாக அதிகரித்துள்ளது. இது 2019 ஜூலையில் 1,303.83 கோடியாக இருந்தது.

எனினும் கொரோனா தொற்று மற்றும் சவாலான வருவாய் நிலைமைக்கு மத்தியில் அதிகரித்து வரும் செலவினம் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கு ஒரு முக்கிய சவாலாக உள்ளது.