ஏறிய வேகத்தில் இறங்கும் கொரோனா… 10 ஆயிரத்திற்கு கீழ் சரிந்தது பாதிப்பு : ஒருநாளில் 30 பேர் உயிரிழப்பு
Author: Babu Lakshmanan4 பிப்ரவரி 2022, 7:39 மணி
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 9,916 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தற்போது கடந்த சில நாட்களாக தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில், 9,916 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது.
ஒரே நாளில் 21,435 பேர் மருத்துவமனையில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 1,55,329 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் தமிழகத்தில் ஒரேநாளில் 30 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 37,696 ஆக அதிகரித்துள்ளது. இதில் அரசு மருத்துவமனையில் 11பேரும், தனியார் மருத்துவமனைகளில் 19 பேரும் உயிரிழந்துள்ளனர்.
இதில் அதிகபட்சமாக சென்னையில் ஒரே நாளில் 1475 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவையில் 1224 பேருக்கும், செங்கல்பட்டில் 983 பேருக்கும், திருப்பூரில் 857 பேருக்கும், சேலத்தில் 435 பேருக்கும், ஈரோட்டில் 576 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
0
0