தமிழகத்தில் திரையரங்குகள், டாஸ்மாக் பார்கள் மூட வேண்டும் : சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு!!

Author: Udayachandran RadhaKrishnan
30 March 2021, 5:40 pm
tasmac, Theatre -Updatenews360
Quick Share

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் திரையரங்குகள், டாஸ்மாக் பார்களை மூட அரசுக்கு உத்தரவிட வேண்டும் என வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது. தற்போது தமிழகத்தல் நாளொன்றுக்கு 2000த்திற்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் திருச்செந்தூரை சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனுவில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், நாடு முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனால் தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதை தடுக்க திரையரங்குகள், டாஸ்மாக் பார்கள், வழிபாட்டுத் தலங்களை மூட அரசுக்கு உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

Views: - 100

0

0