‘எங்க கோரிக்கைகளை நிறைவேற்றுங்க’: தொழிலாளர் நலத்துறை அலுவலகம் முற்றுகை…டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்..!!

Author: Aarthi Sivakumar
7 January 2022, 12:01 pm
Quick Share

கோவை: குறைந்தபட்ச ஊதியம், எட்டு மணிநேர வேலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்கத்தினர் இன்று பாலசுந்தரம் சாலையில் உள்ள தொழிலாளர் நலத் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும், 8 மணி நேர வேலை, வார விடுமுறை மற்றும் பணி நிரந்தரத்தை உறுதி செய்ய வேண்டும், 26 ஆயிரம் ஊழியர்களின் உழைப்பு சுரண்டல் தடுத்து நிறுத்த வேண்டும் தொழிலாளர் நல சட்டங்களில் இருந்து டாஸ்மாக் தொழிலாளர்களுக்கு விலக்கு அளிப்பதை தடுத்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு 50க்கும் மேற்பட்டோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

Views: - 256

0

0