என்னது, டாஸ்மாக் நஷ்டத்தில் இயங்குகிறதா…? குடிமகன்களுக்கு அதிர்ச்சி கொடுத்த ஆர்டிஐ..!!

Author: Babu Lakshmanan
17 September 2021, 3:30 pm
Madurai Tasmac -Updatenews360
Quick Share

சென்னை : தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளாக நடந்த டாஸ்மாக் விற்பனையில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தெரிய வந்துள்ளது.

சென்னையை சேர்ந்த காசிமாயன் என்பவர் கடந்த 15 ஆண்டுகளாக டாஸ்மாக் விற்பனை மற்றும் லாபம் குறித்த தகவலை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்டிருந்தார். அதில், 2004ம் ஆண்டு அதிகபட்சமாக 232.73 கோடி லாபம் கிடைத்துள்ளது. கடந்த 2011ம் ஆண்டு 3.56 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. 2012ம் ஆண்டு 103.64 கோடியும் 2013ம் ஆண்டு 64.44 கோடியும், 2019ம் ஆண்டு 71.93 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாஸ்மாக் அதிக லாபத்துடன் இயங்கி வருவதாக கூறப்பட்டு வரும் நிலையில், 5 ஆண்டுகள் பல கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்கியுள்ளதாக வெளியாகி உள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Views: - 146

0

0