இன்று முதல் டாஸ்மாக் கடை திறப்பு நேரம் நீட்டிப்பு : 10 மணி நேரம் இயங்கும் என அறவிப்பு!!

1 November 2020, 9:41 am
Madurai Tasmac -Updatenews360
Quick Share

தமிழகத்தில் இன்று முதல் டாஸ்மாக் கடைகள் இரவு 10 மணி வரை இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் 24ம் தேதி முதல் டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்பட்டன. தொடர்ந்து மே 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் இயங்கியது. ஆனால் உரிய நடைமுறைகளை பின்பற்றவில்லை என கூறி டாஸ்மாக் கடைகளை மூட உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதற்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து இடைக்காலத் தடை வாங்கி, சென்னை தவிர கடந்த மே மாதம் 16ம் தேதி முதல் மாநிலம் முழுவதும் இயங்கின.

இதையடுத்து கடந்த மாதம் 18ம் தேதி சென்னையிலும் டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. கடைகள் திறப்பு நேரம் நண்பகல் 12 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே இயங்க வேண்டும் என அரசு உத்தரவிட்டது.

இந்த நிலையில நவம்பர் வரை தமிகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், டாஸ்மாக் நிர்வாகம் அறிக்கை ஒன்று வெளியிட்டது. அதில் டாஸ்மாக் விற்பனை கடைகள் நவம்பர் 1ம் தேதி முதல் நண்பகல் 12 மணியில் இருந்து இரவு 10 மணி வரை திறக்க உத்தரவிட்டுள்ளது. இதனால் மதுப்பிரியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Views: - 631

0

0