இல்லாத வீட்டுக்கு வரி.. திமுக நிர்வாகியின் முறைகேடுக்கு துணை போன அலுவலர்கள்.. கோவையில் ஷாக்!
Author: Udayachandran RadhaKrishnan4 August 2025, 3:56 pm
கோவை, செட்டிபாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட அண்ணா நகர், பகுதியில், இலவச வீட்டுமனை பெற்ற சுமார் 900 குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர்.
இலவச வீட்டுமனை பட்ட பெற்றவர்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் அந்த இடத்தில் வீடு கட்டி குடியேற வேண்டும். தவறும் பட்சத்தில் அந்த இடம் வேறொறு பயனாளிக்கு வழங்கப்படும் என்பது விதி.
இந்த நிலையில் தி.மு.க வை சேர்ந்த கல்பனா ராமசாமி என்பவர் தனக்கு இருக்கும் சொந்த வீட்டை, மறைத்து முறைகேடாக இலவச வீட்டுமனை பட்டா பெற்றதாக தெரிய வருகிறது.
மேலும் கடந்த 15 ஆண்டுகளாக அந்த இடத்தில் வீடும் கட்டாமல் காலம் தாழ்த்தி வந்ததால். அந்த இடம் வேறொரு பயனாளிக்கு செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது.
இதனால் கல்பனா ராமசாமி ஆளும் அரசின் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, கோவை செடிபாளையம் பேரூராட்சி அதிகாரிகளின் துணையுடன். இலவசமாக கிடைத்த வீட்டுமனை இடத்தில் வீடு கட்டி குடி இருப்பதாக சொத்து வரி கட்டி வருகிறார்.
இந்த முறைகேட்டின் ஆதாரங்களை திரட்டி அந்த பகுதியை சேர்ந்த இளைஞர் ஐயப்பன் என்பவர், தான் சேகரித்த ஆதாரங்களை செட்டிபாளையம் செயல் அலுவலருக்கு வாட்ஸாப் மூலம் அனுப்பி வைத்து நியாயம் கேட்டதாக தெரிகிறது.
இதை அறிந்த தி.மு.க வினர் கோவை செட்டிபாளையம் காவல் நிலையத்தில் ஐயப்பன் மீது புகார் அளித்து உள்ளதாக மிரட்டி வருகிறார்கள்.
ஐயப்பன் தனது வழக்கறிஞருடன் செட்டிபாளையம் காவல் நிலையம் சென்று வழக்கு குறித்த விவரங்களை கேட்டதற்கு, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் என்று செட்டிபாளையம் காவல் நிலைய போலீசார் தெரிவித்து உள்ளனர்.

அதை தொடர்ந்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் வழக்கு தொடர்பான விவரங்கள் கேட்டு விண்ணப்பித்து உள்ளதாக ஐயப்பன் தெரிவித்து உள்ளார்.

தி.மு.க அரசின் ஒட்டுமொத்த நிர்வாகமும் முறைகேடுகளில் திளைத்து வருவதால் பொதுமக்களின் நிலை திண்டாட்டமாக மாறி உள்ளது.

கோவை மாவட்டத்தில். மேலும் நடிகர் வடிவேலுவின் திரைப்படத்தில் தோண்டாத கினறுக்கு வங்கியில் கடன் பெற்று, கடனை கட்ட முடியாத நிலையில் எனது கினற்றை காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தும் காமெடி காட்சிகளை போல், கல்பனா ராமசாமியும் எனது வீட்டை காணவில்லை என்று வீட்டிற் காண வரி ரசீதுகளை காட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்து அதன் மூலமும் முறைகேடாக பணம் சம்பாரிக்க முயல்வாரா ?என்பதை தி.மு.க மீதமுள்ள எட்டு மாத ஆட்சி காலத்தில் பொருத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.
