கைது என்றதும் கலைந்து சென்ற ஆசிரியர்கள் : ஆர்ப்பாட்டத்தில் சலசலப்பு!!

10 September 2020, 4:16 pm
Protest Cancel - updatenews360
Quick Share

திருப்பததூர் : கைது என்றதும் சக ஆசிரியர்கள் கலைந்து சென்றதால் வெறும் ஐந்து ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பத்தூர் மாவட்ட கல்வி அலுவலகம் முன்பு அரசு ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றதால் போலீசார் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தினால் கைது செய்வோம் என்று எச்சரித்தனர்.

கைது என்றதும் கலைந்து சென்ற ஆசிரியர்கள் கல்வி அலுவலகம் வெளியே நின்று விட்டனர். இதனால் ஐந்து ஆசிரியர்கள் மட்டும் சமூக இடைவெளியை கடைபிடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது குடியாத்தம் பகுதிக்கு புதிய கல்வி மாவட்டம் அறிவிக்கக் கோரியும், அரசு ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் இடமாற்றம் செய்ய வேண்டும் என்ற ஆறு அம்ச கோரிக்கைகள் முன்வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக ஆசிரியர்களை கைது செய்ய திருப்பத்தூர் நகர போலீசார் அரசு பேருந்துகளுடன் காத்திருந்து கடைசியில் யாரும் இல்லை என்றுதும் ஏமாற்றத்துடன் சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறுது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Views: - 0

0

0