ஆசிரியர் வீட்டில் 57 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கு: 20 சவரன் நகை மீட்பு…..இளம்பெண் கைது..!!

Author: Rajesh
16 May 2022, 1:41 pm
Quick Share

சென்னை: தனியார் பள்ளி ஆசிரியர் வீட்டில் 57 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 20 சவரன் மீட்கப்பட்ட நிலையில் இளம் பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை வில்லிவாக்கம் வடக்கு திருமலை நகரை சேர்ந்தவர் பிரிய பிரசாத். அண்ணா நகரில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது வீட்டில் , கடந்த ஏப்ரல் 23ம் தேதி பூட்டு உடைத்து பீரோவில் இருந்து 57 சவரன் தங்க நகைகள் மற்றும் 20 ஆயிரம் ரூபாய் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

சம்பவம் தொடர்பாக ஐ.சி.எப்., போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில் , செங்குன்றம் முண்டி அம்மா நகரை சேர்ந்த கோகிலா (30) அவரது கூட்டாளியான சரவணன் (34) இருவரும் சேர்ந்து வீட்டின் பூட்டை உடைத்து நகைகளை திருடிச் சென்றது தெரியவந்தது.

இதையடுத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போலீசார் ஐ.சி.எப் கள்ளுக்கடை பஸ் நிறுத்தம் அருகில் கோகிலாவை போலீசார் மடக்கி பிடித்தனர். விசாரணையில் கொள்ளையடித்த நகைகளை, பூக்கடை பகுதியில் விற்றாத ஒப்புக் கொண்டார்.

பின், அங்கு சென்று 20 சவரன் தங்க நகைகளை பறிமுதல் செய்து , கோகிலாவை போலீசார் சிறையில் அடைத்தனர். மேலும், தலைமறைவாக கூட்டாளி சரவணனை போலீசார் தேடி வருகின்றனர்.

Views: - 380

0

0