வாகன சோதனையின் போது போக்குவரத்து காவலர் மீது பைக்கில் மோதி தப்பிய வாலிபர்கள் : அதிர வைத்த காட்சி!!

7 February 2021, 4:22 pm
Accident - Updatenews360
Quick Share

கன்னியாகுமரி : அழகியமண்டபம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த சப் இன்ஸ்பெக்டர் மீது இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர்கள் மோதிச் சென்ற சிசிடிவி காட்சி செளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் இருளப்பபுரம் பகுதியை சேர்ந்தவர் குருநாதன். சப் இன்ஸ்பெக்டர் ஆன இவர் தக்கலை போக்குவரத்து காவல் நிலையத்தில் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் நேற்று நாகர்கோவில்-திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலை அழகியமண்டபம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது தக்கலையில் இருந்து அழகியமண்டபம் பகுதிக்கு பல்சர் இருசக்கர வாகனத்தில் ஹெல்மட் அணியாமல் ஒரே வாகனத்தில் மூன்று வாலிபர்கள் வந்து கொண்டிருந்தனர்.

இதைப்பார்த்த சப் இன்ஸ்பெக்டர் குருநாதன் சாலை நடுவே சென்று அவர்களை தடுத்து நிறுத்த முற்பட்ட போது அதிவேகமாக வந்த அந்த நபர்கள் வாகனத்தை நிறுத்தாமல் சப் இன்ஸ்பெக்டர் குருநாதன் மீது மோதி தப்பி சென்றனர்.

இதில் குருநாதன் தூக்கி வீசப்பட்ட நிலையில் படுகாயமடைந்தார். படுகாயமடைந்த அவரை சக காவலர்கள் மீட்டு நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட நிலையில் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த தக்கலை போலீசார் இருசக்கர வாகனத்தால் சப் இன்ஸ்பெக்டரை மோதி சென்ற மர்ம நபர்கள் மூன்று பேரை சி.சி.டி.வி காட்சிகள் அடிப்படையில் தேடி வருகின்றனர்.

சப் இன்ஸ்பெக்டர் மீது இருசக்கர வாகனம் மோதி தூக்கி வீசப்படும் பதைபதைப்பான சி.சி.டி.வி வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 0

0

0