சவுக்கு சங்கருக்கு சவுக்கடி கொடுத்த தமிழிசை சவுந்தரராஜன்…! இது நம்ம லிஸ்ட்லயே இல்லயே…!

6 August 2020, 5:03 pm
Quick Share

சென்னை : தி.மு.க.வின் தீவிர ஆதரவாளரான சவுக்கு சங்கருக்கு தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பதிலடி கொடுத்துள்ளார்.

தி.மு.க.வின் தொண்டர்களுக்கும் மேலாக சமூக வலைதளங்களில் அக்கட்சியின் இமேஜே தூக்கிப் பிடிப்பவர்களில் சவுக்கு சங்கரும் ஒருவர். இவர், அவரது கட்சியினர் மேடையில் செய்வதை, சமூக வலைதளங்களில் செய்து வருகிறார். கறுப்பர் கூட்டத்தை போன்று, இந்துக்களின் கலை, கலாச்சாரத்தை கீழ்த்தரமாகவும், ஆபாசமாகவும் சித்தரித்து வருகிறார். இவர் மீது என்று தேச துரோக விரோத சட்டம் பாயப் போகிறதோ..? என பெரும்பாலானோர் எதிர்பார்த்துள்ளனர்.

இப்படியிருக்க, நேற்று நடைபெற்ற அயோத்தி ராமர் கோவிலுக்கான அடிக்கல் நாட்டு விழாவை உலகம் முழுவதும் கடவுள் பக்தி கொண்ட இந்துக்கள், அவரவர் இருப்பிடங்களில் இருந்தவாறே கொண்டாடினர்.

அந்த வகையில், தெலுங்கானாவின் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், தனது வீட்டில் ராமருக்கு பூஜை செய்து வழிபாடு நடத்தி, தனது மகிழ்ச்சியை வெளிக்காட்டியிருந்தார். இந்தத் தகவலை சமூகவலைதள பக்கத்திலும் பதிவேற்றம் செய்திருந்தார்.

இதற்கு, திமுகவின் ஆதரவாளரான சவுக்கு சங்கர் பதிலளித்து, செமத்தையாக திருப்பி வாங்கிக் கட்டிக் கொண்டுள்ளார்.

tamilisai tweet - updatenews360

ஆளுநரின் பதிவுக்கு சவுக்கு சங்கர் கூறியிருப்பதாவது :- அப்படியே மாரியாத்தாவுக்கு கூழ் ஊத்தி, கருவாட்டுக் கொழம்பும், முருங்கைக் கீரையும் செஞ்சு ஒரு போட்டோ போடுங்க மேடம், எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதைப் படித்து விட்டு கூலாக பதிலளித்துள்ள தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், “அப்படியே மாரியாத்தாவுக்கு கூழ் வைத்து வேப்பிலை சாத்தி வணங்கியிருக்கிறோம். இறைவழிபாட்டில் எமக்கு வேறுபாடு கிடையாது,”எனப் பதிவிட்டதுடன், மாரியம்மனுக்கு தான் வழிபாடு செய்திருந்த பழைய போட்டோவையும் அவர் பதிவிட்டிருந்தார்.

ராமர் கோவிலின் புகழை மட்டுமே இவர்கள் பாடுவார்கள் என்று நினைத்திருந்த சவுக்கு சங்கர் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனின் பதிலை கண்டதும் கப்சிப் ஆகிவிட்டார்.

Views: - 2

0

0