கொரோனா வழிகாட்டுதல் படி நடைபெற்ற கோவில் கும்பாபிஷேகம் : அன்னதானத்தை துவக்கி வைத்த எஸ்.பி வேலுமணி!!

Author: Udayachandran RadhaKrishnan
20 January 2022, 4:50 pm
SP Velumani Temple - Updatenews360
Quick Share

கோவை : செல்வபுரம் அருகே உள்ள ஸ்ரீ காமாட்சி அம்மன் சமேத ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில் கும்பாபிஷேக விழாவில் நடைபெற்ற மகா அன்னதானத்தை அதிமுக சட்டமன்ற கொறடா எஸ்பி வேலுமணி துவக்கி வைத்தார்.

கோவை செல்வபுரம் சிஜிவி நகர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ காமாட்சி அம்மன் சமேத ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில் கும்பாபிஷேக விழா கொரோனா விதி முறைகளை பின்பற்றி நடைபெற்றது.

இதில் பக்தர்கள் அனைவரும் முக கவசங்கள் அணிந்தபடி கலந்து கொண்டனர்.இதில் சிறப்பு அழைப்பாளராக நல்லறம் அறக்கட்டளையின் தலைவர் அன்பரசன் கலந்து கொண்டார்.அவரை கோவில் நிர்வாகிகள் மாலை அணிவித்து வரவேற்றனர்.


முன்னதாக இரண்டாம் கால பூஜையுடன்,விமான கும்பாபிஷேகத்துடன்,மூலஸ்தான மகா கும்பாபிஷேகம் நடைபெற்று புனித நீர் ஊற்றப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற அன்னதானத்தை முன்னாள் அமைச்சரும், தமிழக சட்டமன்ற கொறடாவும் ஆன எஸ்பி வேலுமணி துவக்கி வைத்தார்.

இதில் கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்..விழாவிற்கான ஏற்பாடுகளை தமிழக பா.ஜ.க.கலை கலாச்சார பிரிவு மாநில செயலாளரும் விழா ஒருங்கிணைப்பாளரும் ஆன பி.வி.சண்முகம் ஏற்பாடு செய்திருந்தார்.

Views: - 147

0

0