பொங்கல் பண்டிகைக்கான இலவச வேஷ்டி, சேலை திட்டத்திற்கான டெண்டர் அறிவிப்பு : நெசவாளர்களுக்கு அரிய வாய்ப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
24 August 2022, 10:31 am

பொங்கல் பண்டிகைக்கு இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டத்திற்கு பருத்திநூல் வாங்க தமிழக அரசு டெண்டர் அறிவித்துள்ளது.

பொங்கல் பண்டிகையின் போது கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு வேட்டி சேலைகள் வழங்கும் திட்டம் தமிழக அரசால் 1983-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

இந்த திட்டத்தை ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு செயல்படுத்தி வருகின்றது. இந்த நிலையில் பொங்கல் பண்டிகைக்கு மக்களுக்கு வழங்கப்படும் வேட்டி, சேலை திட்டத்திற்கு 1,683 மெட்ரிக் டன் பருத்திநூல் வாங்க தமிழக அரசு டெண்டர் அறிவித்துள்ளது.

1.80 கோடி பெண்கள், 1.80 கோடி ஆண்களுக்கு வேட்டி, சேலை வழங்குவதற்கான டெண்டருக்கு செப்டம்பர் 9-ம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
டெண்டர் அறிவிப்பால் தைத்தறி நெசவாளர்களில் 15 ஆயிரம் பேரும், விசைத்தறி நெசவாளர்களில் 54 ஆயிரம் பேரும் பலன் அடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • actress kayadu lohar increased his salary double இதுதான் சரியான தருணம்-சமயம் பார்த்து உஷாராக சம்பளத்தை ஏற்றிய கயாது லோஹர்!