மின்வாரிய ஊழியரை அரிவாளால் தாக்கிய பெண்… மூதாட்டி வீட்டுக்கு மின்இணைப்பு கொடுக்க எதிர்ப்பு ; வைரலாகும் ஷாக் வீடியோ…

Author: Babu Lakshmanan
11 August 2023, 4:57 pm

ஆழ்வார்குறிச்சி அருகே மூதாட்டியின் வீட்டிற்கு மின் இணைப்பு கொடுப்பதற்காக சென்ற மின்வாரிய ஊழியரை பெண் அரிவாளை கொண்டு எரியும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சியை அடுத்த செட்டிகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துக்குட்டி என்பவரது மனைவி பூபதி. முத்துக்குட்டி 10 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்து விட்ட நிலையில், பூபதி மட்டும் தனிமையில் வசித்து வருகிறார். தனது வீட்டிற்கு மின் இணைப்பு வழங்கக்கோரி கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர் மின்வாரிய அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளார்.

அதன்பேரில், மூதாட்டி பூபதி வீட்டுக்கு மின்இணைப்பு கொடுக்க மின்வாரிய அதிகாரிகள் சென்றுள்ளனர். அப்போது, மூதாட்டியின் வீட்டுக்கு மின்இணைப்பு வழங்கக் கூடாது என்று பக்கத்து வீட்டுக்காரர்கள் மின்வாரிய ஊழியர்களை மிரட்டியுள்ளனர். இதனால் மின்வாரிய ஊழியர்களும் மின் இணைப்பு கொடுக்காமல் காலம் தாழ்த்தியதாக கூறப்படுகிறது.

இதனால், அதிருப்தியடைந்த மூதாட்டி பூபதி ஆழ்வார்குறிச்சி மின்வாரிய அலுவலகத்தில் மின்இணைப்பு கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனையடுத்து, போலீசாரின் பாதுகாப்போடு மின்வாரிய ஊழியர்கள் மின் இணைப்பு கொடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.

நேற்று மாலை மின்வாரிய ஊழியர்கள் மூதாட்டி பூபதியின் வீட்டிற்கு மின் இணைப்பு கொடுப்பதற்காக மின்கம்பத்தில் ஏறி மின் இணைப்பு கொடுக்க முயன்றபோது, தொலைபேசியில் தனது உறவினர்களிடம் உரையாடியபடி கையில் அரிவாளுடன் வந்த கல்பனா என்ற பெண் தகாத வார்த்தைகளால் திட்டினார். தொடர்ந்து, மின்வாரிய ஊழியரை நோக்கி அரிவாளை வீசி தாக்கினார். மின்வாரிய ஊழியர்கள் இதுதொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

Courtesy ;@thinak

இதுகுறித்து ஆழ்வார்குறிச்சி கல்பனா மீது வழக்குப்பதிவு செய்து, கைது செய்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!