தமிழக கேரள எல்லையில் பதற்றம்… தயார் நிலையில் தண்டர்போல்ட் சிறப்பு குழு : மாவோயிஸ்டுகள் துப்பாக்கிச் சூடால் பரபரப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
14 November 2023, 11:56 am

தமிழக கேரள எல்லையில் பதற்றம்… தயார் நிலையில் தண்டர்போல்ட் சிறப்பு குழு : மாவோயிஸ்டுகள் துப்பாக்கி சூடால் பரபரப்பு!!

தமிழக – கேரள மாநில எல்லையில் அமைந்திருக்கும் சோதனை சாவடிகள் உஷார்.காவலர்களுக்கு நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விழிப்புடன் இருக்க நேரடியாக சென்று அறிவுறுத்தல்.

தமிழ்நாடு – கேரள மாநில எல்லையில் அமைந்திருக்கும் வயநாடு மாவட்டத்தில் தொடர்ந்து மாவோயிஸ்டுகள் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் நேற்று காலை கேரள மாநில தண்டர்போல்ட் சிறப்பு குழுவிற்கும் மாவோயிஸ்ட்களுக்கும் இடையே தொடர்ந்து துப்பாக்கி சூடு நடந்துள்ளது.

இதனை ஒட்டி தமிழக – கேரள மாநில எல்லையில் அமைந்திருக்கும் சோதனை சாவடிகள் மற்றும் வனப்பகுதியை ஒட்டி உள்ள பகுதியில் அமைந்திருக்கும் ஓவேலி சோதனை சாவடி ஆகியவற்றை நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவடிவேல் நேரில் பார்வையிட்டு அங்கு பணியில் இருக்கும் காவலர்களுக்கு எந்நேரமும் விழிப்புடன் செயல்பட அறிவுரைகள் வழங்கினார்.

  • retro movie second day collection is low எங்கடா தாவுறது? நானே தவழ்ந்துட்டு இருக்கேன்- ரெண்டாவது நாளிலேயே புஸ்ஸுன்னு போன ரெட்ரோ?