பழைய இரும்பு கடையில் பயங்கர தீ விபத்து : 1 மணி நேரம் போராடி தீயை அணைத்த வீரர்கள்!!

Author: Udayachandran RadhaKrishnan
7 October 2021, 11:44 am
Tirupur Fire -Updatenews360
Quick Share

திருப்பூர் : இருசக்கர வாகன உதிரி பாகங்கள் விற்கும் கடையில் தீ விபத்து ஏற்பட்டதில் பல ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தது.

திருப்பூர் கொங்கு மெயின் ரோடு பகுதியில், குப்புசாமி என்பவருக்கு சொந்தமான இருசக்கர வாகன உதிரி பாகங்கள் விற்கும் கடை செயல்பட்டு வருகிறது. வழக்கம்போல் விற்பனை முடிந்து ஊழியர்கள் கடையை பூட்டி விட்டு சென்றுள்ளனர்.
இதனிடையே கடையின் பின் பகுதியில் இருந்து கரும்புகையுடன் தீ எரிவதை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக கடை உரிமையாளருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் கடையின் பின்புறம் இரு சக்கர வாகனங்களுக்கு மாற்றிய பழைய ஆயில் இருப்பு வைத்திருந்தால் தீ மளமளவென பரவி கொழுந்துவிட்டு எரிய தொடங்கியது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த திருப்பூர் வடக்கு தீயணைப்பு துறையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

முதல்கட்ட விசாரணையில் மின் இணைப்பில் ஏற்பட்ட பழுது காரணமாக இந்த விபத்து நடந்திருக்கலாம் என தீயணைப்பு துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து தொடர்பாக திருப்பூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 736

0

0