நள்ளிரவில் கோவையில் பயங்கரம்.. பிரபல ரவுடியை துப்பாக்கியால் சுட்ட காவல்துறை.!!

Author: Udayachandran RadhaKrishnan
21 September 2024, 10:29 am

கன்னியாகுமரியை சேர்ந்த பிரபல ரவுடி ஆல்வின் மீது பல்வேறு வழக்குகள் உள்ளது. நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலைய குற்ற வழக்கு சம்பந்தமாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்த வந்த ஆல்வின் என்பவர் இன்று அதிகாலை கொடிசியா மைதானத்தில் இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்து.

ஆல்வின் என்பவரை பிடிக்க முயற்சித்த போது ஆல்வின் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் தாக்கிய போது தலைமை காவலர் ராஜ்குமார் என்பவரின் இடது மணிக்கட்டுப் பகுதியில் வெட்டுக்காயம் ஏற்படுத்தி தப்பிச் சென்றார்.

தற்காப்புக்காக உதவி ஆய்வாளர் கார்த்திகேயன் இரண்டு கால் முட்டிகளிலும் துப்பாக்கியால் சுட்டு பிடித்தார் தற்பொழுது ஆல்வின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!