தீவிரவாத அமைப்புடன் தொடர்பு.. மாமனார் வீட்டில் தங்கியிருந்த சென்னை இளைஞர் கைது…!!!

Author: Babu Lakshmanan
27 August 2022, 12:02 pm

சவுதியில் உள்ள தீவிரவாத அமைப்புடன் சிக்னல் என்ற தடை செய்யப்பட்ட செல்போன் செயலியில் தொடர்பு கொண்டு பேசிய சென்னை இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளூர் லங்கா கார தெருவில் உள்ள மாமனார் வீட்டில் தங்கி காக்களூர் பகுதியில் கறிக்கடை ஒன்றில் வேலை செய்து வந்தவர் சென்னை ஆர்.கே. நகரை சேர்ந்த ராஜா முகமது. நேற்று இரவு சென்னை குற்றப் புலனாய்வு சிறப்பு போலீசார், அவரை வீட்டில் வைத்து கைது செய்தனர்.

சவுதியில் உள்ள தீவிரவாத அமைப்புகளுடன் சிக்னல் என்ற செல்போன் செயலியில் பேசியதாக ராஜா முகமதுவிடம், ஐ.ஏ.ஐ.பி.ரா உளவுத்துறையினர் 18 மணி நேரம் விசாரணை செய்தனர்.

இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்பட்டதாக கைது செய்த அவரை நீதிபதி மூகாம்பிகை முன்னிலையில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

  • after retro flops Pooja Hegde Unlucky Actress பூஜா ஹெக்டே ராசியில்லாத நடிகையா? அப்போ ஜனநாயகன் கதி?