ரீலா இருந்தாலும்…ரியலா இருந்தாலும் அதே ஸ்டைல்தான்: Offroad பைக் ரைடில் மாஸ் காட்டிய ‘தல’..!!

Author: Aarthi Sivakumar
28 October 2021, 10:13 am
Quick Share

offroading எனப்படும் கரடுமுரடான இடத்தில் அஜித் பைக் ஓட்டிச் செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Image

‘வலிமை’ படப்பிடிப்பு நிறைவடைந்த கையோடு பைக் ரைடு கிளம்பிவிட்டார் தல அஜித். பைக்கில் world trip பிளான் செய்துள்ள அஜித் அதனை தொடங்கியும் உள்ளார். சமீபத்தில், இந்திய – பாகிஸ்தான் எல்லையான வாகாவில் கையில் தேசியக் கொடியுடன் அஜித் நிற்கும் புகைப்படம் இணையத்தில் வைரலானது.

Image

மேலும், சில புகைப்படங்களை தயாரிப்பாளர் போனி கபூர் வெளியிட்டார்.இதன்பின்பு, பாலைவனத்தில் அஜித் பைக்கின் கீழ் அமர்ந்து ஓய்வு எடுத்துக்கொள்வது போன்ற புகைப்படம் வெளியானது.

Image

இந்நிலையில், offroading எனப்படும் கரடுமுரடான இடத்தில் அஜித் பைக் ஓட்டிச் செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தனக்கே உரித்தான ஸ்டைலில் கெத்தாக பைக் ஓட்டிச் செல்கிறார். இந்த வீடியோவை சக பைக் ரைடரான சுப்ரேஜ் வெங்கட் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அஜித்தின் பைக் ரைடு வீடியோவை அவரது ரசிகர்கள் தங்களுக்கு பிடித்தமான பிஜிஎம் சேர்த்து இணையத்தில் பகிர்ந்தும் வருகின்றனர்.

Views: - 292

1

0