ருதுராஜ்க்கு பதில் மீண்டும் கேப்டனாக தல தோனி : சிஎஸ்கே அணியில் நடந்த திடீர் மாற்றம்!

Author: Udayachandran RadhaKrishnan
4 April 2025, 6:43 pm

2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் சென்னை அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக முதல் போட்டியில் மும்பை அணியுடன் பெற்ற வெற்றி எளிதாக கிடைக்க வேண்டியது. ஆனால் கடைசி வரை போட்டியை வீரர்கள் இழுத்து சென்றனர்.

அதே போல அடுத்த இரு போட்டிகளிலும் ஜெயிக்க வேண்டிய சிஎஸ்கே தட்டு தடுமாறி விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களின் சொதப்பல், மிடிலில் ஆடுவதற்கு ஹிட்டர்கள் இல்லாததால் சென்னை அணி தோல்வியை சந்தித்தது.

இதையும் படியுங்க: பேட்டிக் கொடுக்க பயந்தாரா புஸ்ஸி ஆனந்த்.. தெறித்து ஓடிய தவெக தொண்டர்கள்!

இதனால் அணியில் மாற்றம் செய்ய வேண்டும் என பரவலான கருத்துகள் எழுந்தது. இதையடுத்து மீண்டும் நியூசி வீரர் கான்வேவை போட்டியில் இறக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதே சமயம், வன்ஷ் பேடி களமிறக்கப்படுவார் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் நாளை டெல்லி அணியுடன் சென்னை அணி மோதுகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் போட்டி நடைபெற உள்ளது.

ஆனால் ராஜஸ்தான் அணியுடன் விளையாடிய போது ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு காயம் ஏற்பட்டது. இதனால் இதுவரை ருதுராஜ் பயிற்சி மேற்கொள்ளவில்லை என்பதால், அவர் விளையாடுவாரா இல்லையா என்பது இன்றிரவுக்குள் தெரிந்துவிடும். அவர் விளையாடவில்லை என்றால் நாளைய போட்டியில் கேப்டன் யார் என்பது குறித்து முடிவு செய்யப்படவில்லை.

Thala Dhoni returns as captain in place of Ruduraj

ஒரு வேளை தோனியை கேப்டனாக களமிறக்கப்படலாம் என்றும், ருதுராஜ் ஃபிட்டாக இல்லை என்றால் தோனிக்கு தான் கேப்டன் பொறுப்பை எடுத்து வழிநடத்தி செல்வார் என பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹசி தெரிவித்துள்ளார்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!