விஜய்க்கு வில்லனாகும் பிரமாண்ட பட நடிகர்.? வெளியான புதிய தகவல். !

Author: Rajesh
27 April 2022, 4:51 pm
Quick Share

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் தான் நடிகர் விஜய். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் பீஸ்ட். பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களையே அதிகமாக பெற்றது. இதனால் பீஸ்ட் திரைப்படம் பெரிய வசூல் சாதனைகளை செய்ய தவறியது என்றே கூறலாம்.

இதனிடையே இப்படத்தை தொடர்ந்து தளபதி விஜய் இயக்குனர் வம்சி இயக்கத்தில் தளபதி 66 படத்தில் நடித்து வருகிறார், இப்படத்தின் ஷூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் தளபதி 66 திரைப்படம் முடியும் முன்பே தளபதி 67 திரைப்படம் குறித்த தகவல்கள் தான் இணையத்தில் பரவி வருகிறது. அதன்படி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தின் மீண்டும் நடிக்கவுள்ளார், அப்படத்திற்காக மாஸ்டர் படக்குழு மீண்டும் இணையவுள்ளது.

மேலும் தற்போது தளபதி 67 திரைப்படத்தின் ஷூட்டிங் அக்டோபர் 3 ஆம் தேதி முதல் தொடங்கும் என தகவல் வந்துள்ளது. அதுமட்டுமின்றி இந்தபடத்தில் வில்லனாக கேஜிஎப் படத்தில் வில்லனாக மிரட்டிய சஞ்சய் தத்-யை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Views: - 501

0

0