மதுபோதையில் பைக்கில் வந்த நபருக்கு போதை தெளிய வைத்த போலீஸ் : வைரலாகும் வீடியோ..!!
Author: Babu Lakshmanan27 ஜனவரி 2022, 2:51 மணி
தஞ்சை : தஞ்சாவூரில் மதுபோதையில் இருசக்கர வாகனத்தில் வந்த நபருக்கும், போலீசார் போதை தெளிய வைத்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், தமிழக அரசு அறிவித்த கட்டுப்பாடுகள் முறையாக கடைபிடிக்கப்படுகின்றனவா..? என போலீசார் பல்வேறு இடங்களில் முகாமிட்டு கண்காணித்து வருகின்றனர். இதற்காக, தஞ்சாவூரில் பல்வேறு இடங்களில் காவல் துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், தஞ்சை போக்குவரத்து ஒழுங்கு பிரிவு காவல் ஆய்வாளர் ரவிச்சந்திரன் ரோந்து பணியில் ஈடுபடும் போது, தஞ்சை கீழ வாசல் பகுதியில் மது தலைக்கேறிய போதையில் ஒருவர் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்தார். அந்த நபரை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் அவர் போதையில் இருந்தது உறுதியானது. பின்னர், அந்த நபரின் தலையில் தண்ணீர் ஊற்றி போதையை தெளிய வைத்து எச்சரித்து அனுப்பி வைத்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
0
0