மேகதாது அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும் : விவசாய சங்கத்தினர் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம்..!!

21 June 2021, 5:43 pm
thanjai farmers - updatenews360
Quick Share

தஞ்சை ; காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டும் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கத்தினர் தஞ்சை ரயில் நிலையம் முன்பு கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசின் நடவடிக்கையை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்றும, காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடக அரசின் நடவடிக்கைக்கு துணை போவதாகவும் இதனை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், தமிழக அரசு மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதோடு இருந்துவிடாமல், கர்நாடக அரசுக்கும் காவிரி மேலாண்மை வாரியத்திற்கும் அழுத்தம் கொடுக்கும் வகையில் தனது நடவடிக்கையை மாற்றிக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினர்.

அப்போது கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு பசுமை தீர்ப்பாயத்தின் அனுமதி வாங்கி உள்ளதாக கூறி நிதி ஒதுக்கி பணியை தொடங்கி உள்ள நிலையில், இதனை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், காவிரி உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்கள் சார்பில் தஞ்சை ரயில் நிலையம் முன்பு கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Views: - 141

0

0