தஞ்சை பெரியகோவில் சித்திரைதிருவிழா தேரோட்டம்… கொரோனா தொற்று ஊரடங்கிற்கு பிறகு புதுப்பொலிவு பெறும் தேர்…!!

Author: Babu Lakshmanan
7 April 2022, 7:11 pm

தஞ்சை பெரியகோவில் சித்திரைதிருவிழா தேரோட்டம் வருகிற 13ந்தேதி நடைபெறவுள்ள நிலையில் தேரினை சுத்தம் செய்தும் பெயிண்டிங்க் செய்தும், சக்கரங்களுக்கு கிரீஸ் வைத்து பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தஞ்சை பெரியகோவில் சித்திரை திருவிழாவில் 100 ஆண்டுகளுக்கு முன்பு மன்னர்கள் காலத்தில் ஓடிய தேர் நின்று போன நிலையில் முன்னாள்‌ முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சியின் போது தஞ்சை மக்களின் கோரிக்கையை ஏற்று புதிய தேர் செய்யப்பட்டு கடந்த 2015ஆண்டில் முதல் தேரோட்டம் தொடங்கியது. இடையில் இரண்டு ஆண்டுகள் கொரனா தொற்று காலத்தில் தேரோட்டம் நிறுத்தப்பட்டு தற்போது, 6வது சித்திரை தேரோட்டம் வருகிற 13ந்தேதி நடைபெறுகின்றது. தஞ்சையின் நான்கு ராஜவீதிகளில் வலம் வருவதற்கு ஏதுவாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு புதிய சாலைகள் போடப்பட்டுளளன. மேலும் தேரினை பராமரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

தஞ்சை பெரியகோவில் சித்திரைத் திருவிழாவிற்காக கடந்த 30ந் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 18 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் சித்திரை தேரோட்டம் முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது. 13ந்தேதி காலை 5.45மணிக்கு மேல் தஞ்சை பெரியகோவிலிலிருந்து விநாயகர், சுப்பிரமணியர், நீலோத்பாலம்பாள், சண்டிகேஸ்வரர், தியாராஜர், கமலாம்பாள் ஆகிய பஞ்ச மூர்த்திகள் ஊர்வலமாக புறப்பட்டு தேர் மண்டபத்தில் எழுந்தருளுவார்கள்.

தியாகராஜர்-கமலாம்பள் மட்டும் தேரில் எழுந்தருளி பகதர்களுக்கு காட்சி அளிப்பார்கள். தேரோட்டத்திற்கு முன்பு பூஜைகள் செய்யப்பட்டபின் பக்தாகள் வடம் பிடித்து இழுக்க மேலராஜ வீதியிலிருந்து புறப்படும் தேர் வடக்கு ராஜவீதி, கீழராஜ வீதி, தெற்கு ராஜ வீதிகள் வழியாக வந்து தேரடியை வந்தடையும். இத்தேரோட்டத்திற்கு திராளப் பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்ப்படுகிறது.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?