தஞ்சையில் கனிம கொள்ளையில் ஈடுபடும் தனியார் நிறுவனம்… 7ம் தேதி கட்டிட பொறியாளர்கள், லாரி உரிமையாளர்கள் போராட்டம் அறிவிப்பு

Author: Babu Lakshmanan
3 February 2022, 6:10 pm
Quick Share

தஞ்சை : கனிம கொள்ளையில் ஈடுபட்டு வரும் தனியார் நிறுவனத்தின் அராஜகப் போக்கை கண்டித்து வரும் 7ம் தேதி தஞ்சை கட்டிட பொறியாளர்கள் மற்றும் டிப்பர் லாரி உரிமையாளர்கள் போராட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- தஞ்சை மாவட்டத்தில்‌ உள்ள தனியார்‌ பட்டா இடங்கள்‌, பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறைக்கு சொந்தமான ஏரிகள், குளங்கள் ஆகியவற்றில் மண் எடுப்பதற்கு யூனிட் ஒன்றுக்கு ரூ.500 வீதம் தரவேண்டுமென புதுக்கோட்டையைச் சேர்ந்த எஸ்ஆர் நிறுவனம் வற்புறுத்துகிறது.

தர மறுத்தால் மண் எடுக்க முடியாது என்றும், தஞ்சை மாவட்டத்தின் அதிகாரிகள் எங்கள் பக்கம் உள்ளனர் என்றும் மிரட்டுகின்றனர். புதுக்கேட்டையைச் சேர்ந்த எஸ். ராமச்சந்திரனின் நிறுவனமான எஸ்ஆர் மைன்ஸ்-க்கு சம்பந்தப்பட்ட வீரக்குடி ராஜா (எ) ராஜ்குமார், பாலகிருஷ்ணன் மற்றும் சக்தி ஆகியோர், Royality தரவில்லை என்றால் குவாரிகளல் மண் எடுக்க இயலாது என்று மாவட்டத்தில் நடைமுறையில் உள்ள மண் குவாரிகளை இயக்கவிடாமல் தடுக்கின்றனர்.

சம்பந்தப்பட்ட குவாரி உரிமையாளர்கள் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும், குவாரிகளை இயக்க வேண்டும் என்றால் Royality கண்டிப்பாக தர வேண்டும் என்று குண்டர்களை வைத்து மிரட்டுகின்றனர்.
தமிழக அரசுக்கு முறைப்படி செலுத்த வேண்டிய கட்டணத் தொகையை செலுத்தியும் குவாரிகளை இயக்கவிடாமல் முடக்குகின்றனர்.

1 யூனிட் 500 ரூபாய்க்கு விற்ற கிராவல் மண் தற்போது ரூ.1,500க்கு விற்க வேண்டிய நிலை உள்ளது. இதனால், தற்போது கட்டிட பொறியாளர்கள், இத்தொழிலையே நம்பி இருக்கும் தஞ்சை மாவட்ட டிப்பர் லாரி உரிமையாளர்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து நிற்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளனர்.

நமது தஞ்சை மாவட்டத்தில் 6 யூனிட் ரூ.7,000க்கு விற்ற கிராவல் மண் தற்போது ரூ.12,000க்கு விற்கப்படுகிறது. இந்த Royality என்னும் விலையேற்றத்தினால் பொதுமக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படுகின்றது. மேலும், பொதுமக்களுக்கு பயனுள்ள தமிழக அரசின் பொதுப்பணித்துறை பணிகள் மற்றும் நெடுஞ்சாலைத்துறை பணிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றன.

  • கணிம வளத்தை தனியாருக்கு தாரை வார்த்து கொடுத்ததா தமிழக அரசு?
  • கயவர்களின்‌ பிடியில்‌ தமிழ்நாட்டின்‌ கனிம வளத்துறையா?
  • தமிழ்நாட்டின்‌ கனிம வளத்துறை அமைச்சராகிறாரா புதுக்கோட்டையைச்‌ சேர்ந்த எஸ்.ராமச்சந்திரன்‌ (SR நிறுவனம்)
  • கொள்ளை கும்பலின்‌ கட்டுப்பாட்டில்‌ உள்ளதா கனிம வளத்துறை?
  • தமிழக முதல்வரின்‌ நல்லாட்சியை நாசமாக்க நினைக்கிறாரா புதுக்கோட்டையைச்‌ சேர்ந்த எஸ்.ராமச்சந்திரன்‌
  • தமிழ்நாட்டின் ‌கனிம வளத்துறை தமிழக அரசின்‌ கட்டுப்பாட்டில்‌ இயங்குகிறதா, இல்லை புதுக்கோட்டையை சேர்ந்த தனி ஒருநபர் எஸ் ராமச்சந்திரன்‌ என்பவரின்‌ கட்டுப்பாட்டில்‌ இயங்குகிறதா..?

ஆகவே உடனடியாக தமிழக அரசு மற்றும்‌ மாவட்ட நிர்வாகத்தின்‌ கவனத்திற்கு எடுத்துச் சென்று சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளின்‌ மூலம்‌ முறையான விசாரணை மேற்கொண்டு Royality என்னும்‌ விலையேற்றத்தினை ரத்து செய்து பாதுமக்களுக்கு பயனுள்ள வகையில்‌ நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்‌, என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • vikram struggle continue அடிமேல் அடி வாங்கும் விக்ரம்…சிக்கலில் அடுத்த படம் ..!
  • Views: - 1191

    0

    0