ஆடு மேய்க்கச் சென்ற இளம்பெண் கூட்டுப் பலாத்காரம் : 24 மணிநேரத்திற்குள் காமூகர்களை கைது செய்த காவல்துறை..!!!

Author: Babu Lakshmanan
26 October 2021, 7:28 pm
rape and murder - udpatenews360
Quick Share

தஞ்சை : பாபநாசம் அருகே ஆடு மேய்க்க சென்ற இளம்பெண் கூட்டு பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

பாபநாசம் தாலுக்கா அம்மாபேட்டை அருகே சூழியக்கோட்டையில் ஆடு மேய்க்கச் சென்ற கனகவள்ளி என்ற இளம்பெண் மர்ம நபர்களால் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார்.

இதுகுறித்து பாபநாசம் டிஎஸ்பி பூரணி உத்தரவின்பேரில் அம்மாபேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கரிகாலச் சோழன் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில், தனிப்படை போலீசார் ஒரத்தநாடு அருகே ஆற்றங்கரையோரம் பதுங்கி இருந்த குற்றவாளிகள் பெரியசாமி (30), சதீஷ் (25) ஆகிய இருவரை கைது செய்து அம்மாபேட்டை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் கனகவள்ளியை பலாத்காரம் செய்ததை ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது. மேலும், இந்த வழக்கில் மற்றொருவருக்கு தொடர்பு இருப்பதாகவும் அந்த நபரையும் தேடி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Views: - 226

0

0