இலங்கையில் கரை ஒதுங்கிய தரங்கம்பாடி மீனவர்கள் 3 நாட்களுக்கு பிறகு விடுதலை…!!

12 November 2020, 2:19 pm
fisher man - updtaenews360
Quick Share

நாகை: இலங்கையில் கரை ஒதுங்கிய தரங்கம்பாடி மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படையினர் 3 நாட்களுக்குப் பிறகு விடுதலை செய்துள்ளனர்.

கடந்த 7ம் தேதி நாகை மாவட்டம் தரங்கம்பாடியைச் சேர்ந்த மீனவர்கள் முத்துலிங்கம், ரஞ்சித், அண்ணாதுரை மற்றும் ராஜ் ஆகிய 4 மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டு கரைக்குத் திரும்பினர். அப்போது படகில் டீசல் தீர்ந்ததால், படகு நடுக்கடலில் நின்றுள்ளது.

இதனையடுத்து வழிதெரியாமல் அவர்கள் இலங்கை மாமுனை என்ற இடத்தை சென்றடைந்துள்ளனர். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்களின் படகைக் கண்டதும் அவர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

இதனையடுத்து, 4 மீனவர்களையும் தங்களுடன் அழைத்துச் சென்று, அவர்களை பாதுகாப்பாக தங்கவைத்து உணவு வழங்கியுள்ளனர். மீனவர்களை 3 நாட்கள் அங்கு வைத்திருந்த இலங்கை கடற்படையினர், பின்னர் அவர்களின் படகுக்கு டீசல் வழங்கி கோடிக்கரைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இன்று சொந்த ஊர் திரும்பிய 4 மீனவர்களையும் அவர்களின் குடும்பத்தினர் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். மீனவர்கள் பிடித்து வந்த மீன்கள் கோடிக்கரை கடற்கரையில் ஏலம் விடப்பட்டன.

Views: - 19

0

0