அரசு அதிகாரிக்கே பாதுகாப்பு இல்லையா? வட்டாட்சியர் வாகனத்திற்கு தீ வைப்பு : இளைஞர் கைது!!
Author: Udayachandran RadhaKrishnan24 October 2021, 5:02 pm
விழுப்புரம் : கண்டாச்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வட்டாட்சியர் வாகனத்திற்கு பெட்ரோல் ஊற்றி தீவைப்பு.தீ வைப்பு சம்பவத்தில் ஈடுபட்ட ரஞ்சித் என்பவர் கைது
விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் வட்டாட்சியராக கார்த்திக் என்பவர் பணிபுரிந்து வருகிறார் இந்நிலையில் இவரது வாகனம் இன்று கண்டாச்சிபுரத்திலுள்ள அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
அப்பொழுது அங்கு மதில் ஏறி குதித்து உள்ளே வந்த ஒரு மர்ம நபர் வட்டாட்சியர் கார்த்திக் வாகனத்தின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார்.உடனடியாக அங்கிருந்த காவலர்கள் மற்றும் உதவியாளர்கள் விரட்டி சென்று அவரை பிடித்தது அவர் கண்டாச்சிபுரம் இந்திரா நகர் பகுதியை சேர்ந்த 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ரஞ்சித் என்பது தெரியவந்தது.
இவர் மனநிலை பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இவருடைய தந்தை ரமேஷிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது உறுதிசெய்யப்பட்டது. இந்நிலையிலும் போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .
0
0