ரத்தம் கக்கி சாவீர்கள்… முன்னாள் அமைச்சர் பேச்சால் சிரிப்பொலி!!

Author: Udayachandran RadhaKrishnan
28 June 2025, 6:45 pm

மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் நடைபெற்றது. இதில் 500-க்கும் மேற்பட்ட அதிமுக பூத் கமிட்டியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அவர்களுடன் பேசியதாவது: அம்மா பேரவை செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் முதல் கொண்டு இங்கே வருகை தந்துள்ளார் இந்த கட்சியின் வெற்றி பிரகாசமாக உள்ளது. வராதவர்கள் கூட இங்கே வந்திருக்கிறார்கள்.இது ஒரு எடுத்துக்காட்டு என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

இதையும் படியுங்க: மகள் செல்போனில் தாயின் உல்லாச வீடியோ… மருமகனோடு இரவோடு இரவாக ஓட்டம்!

பொதுச் செயலாளர் கருத்தை எந்த அளவிற்கு கழகத் தொண்டர்கள் செவி கொடுத்து இருக்கிறார்கள் அந்த ஆணையை ஏற்று நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக நீங்கள் எல்லோரும் எம்ஜிஆர் ஜெயலலிதா சொல்வது போல இருவரும் தெய்வங்கள் அவர்கள்
அவருடைய கொள்கையை நாம் நிறைவேற்ற வேண்டும்.

திமுக எனும் தீய சக்தியை ஒழிக்கும் முறை ஓயாமல் பாடுபட வேண்டும். இன்று ஜெயலலிதா அவர்கள் சொன்னதை வலியுறுத்தி இந்த இயக்கத்தில் பெருவாரியாக இளைஞர்கள் வரவேண்டும் குறிப்பாக அடுத்த தலைமுறையினர் வரவேண்டும்.

தற்போது நடைபெறக் கூடிய மிக முக்கியமான கூட்டம் தமிழகத்தில் நல்லாட்சி அமைப்பதற்காக பொதுச்செயலாளர் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார்
சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள பொதுச் செயலாளருக்கு சிறப்பானதொரு வரவேற்பு வழங்க வேண்டும்.

அதேபோன்று பூத்துகளில் இருக்கக்கூடிய குறைகளை சரி செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் இந்த கூட்டம் நாளை திருமண நிகழ்வு இந்த மண்டபத்தில் நடைபெறுவதால் நமது கூட்டம் ஒரு மணிக்குள் நிறைவு செய்ய வேண்டிய ஒரு நிலை அற்புதமான ஆறு தீர்மானங்கள் இங்கே நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.

இந்த தீர்மானத்தின்படி செயல்பட பட வேண்டும் என்பது தான் பொதுச்செயலாளர் உடைய எண்ணம் மற்ற மாவட்டங்களை ஒப்பிடுகையில் எது மாதிரியும் இல்லாமல் புது மாதிரியாக நாம் வரவேற்பு வழங்க வேண்டும்.

பொது நிகழ்ச்சியை பற்றி பேசுவதால் ஊடகங்களுக்கு இனி அனுமதி கிடையாது அனைவரும் தயவு செய்து வெளியே செல்லுங்கள். அனைவருக்கும் சாப்பிட்டு விட்டு செல்லுங்கள் பிரியாணி கொடுங்கள் சாப்பிடாமல் சென்றால் ரத்தம் கக்கி செத்து விடுவீர்கள்.

நீங்கள் என்னதான் என்னை ஓட்டினாலும் நம்முடைய பாரம்பரிய பண்பாடு படி உங்களுக்கு உணவு அளித்து தான் நான் அனுப்புவேன் என கூறினார்.

  • actress kayadu lohar increased his salary double இதுதான் சரியான தருணம்-சமயம் பார்த்து உஷாராக சம்பளத்தை ஏற்றிய கயாது லோஹர்!
  • Leave a Reply