பழி வாங்கவே இடமாற்றம் : பேராயருக்கு எதிர்ப்பு தெரிவித்து குடும்பத்துடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட ஆயர்!!

Author: Udayachandran RadhaKrishnan
25 September 2021, 2:52 pm
Cbe Dharna -Updatenews360
Quick Share

கோவை : பழி வாங்கும் நோக்கத்தில் தன்னை இடமாற்றம் செய்துள்ளதாக கோவையில் திருச்சபையின் ஆயர் குடும்பத்துடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் தென்னிந்திய திருச்சபை பிஷப் (சி.எஸ்.ஐ) அலுவலகம் உள்ளது. இங்கு பிஷப் திமோத்தி ரவீந்தர் தலைமையில் ஒரு பிரிவினரும், மற்ற எதிர் தரப்பினரும் செயல்பட்டு வருகின்றனர்.

கடந்த ஜூலை மாதம் இரு தரப்புக்கும் இடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இதில் நிர்வாகி வக்கீல் நேசமெர்லின் என்பவர் மண்டை உடைந்தது. ரேஸ்கோர்ஸ் போலீசார் இது குறித்து விசாரித்தனர்.

விசாரணையில் இரு தரப்பை சேர்ந்த 10க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து ஆயர் வில்சன் குமார் என்பவர் இடமாற்றம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனைக் கண்டித்து இன்று அவர் கோவை ரேஸ்கோர்சில் உள்ள பேராயர் இல்லம் முன்பு தனது குடும்பத்துடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

அப்போது அவர் கூறுகையில், ” கோவை பேராயத்தில் கடந்த 4 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறேன். நிருவாகக் குழுவில் பல பொறுப்புகளை வகித்துள்ளேன். இந்நிலையில், நேற்றைய தினம் சமூக வலைத்தளத்தில் என்னை சென்னிமலைக்கு மாற்றிவிட்டதாக தகவல் பரவியது.
இதுகுறித்து பேராயரை சந்தித்து கேட்பதற்காக வந்துள்ளேன். அவர் விதிகளை பின்பற்றாமல் முன்னுக்குப் பின் முரணாக பழிவாங்கும் நோக்கில் இடமாறுதல் செய்துள்ளதாக தெரிகிறது. இதனை கைவிட வேண்டும்.” இவ்வாறு அவர் கூறினார்.

Views: - 106

0

0