சுடுதண்ணியை புடிச்சு மூஞ்சில ஊத்துற டீ மாஸ்டர்கள் இங்கு ஏராளம்.. பவன் கல்யாணை விமர்சித்த பிரபலம்!

Author: Udayachandran RadhaKrishnan
23 June 2025, 2:29 pm

நேற்று மதுரையில் இந்து முன்னணி சார்பில் முருகர் பக்தர்கள் மாநாடு நடைபெற்றது. இதில் ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

நிகழ்ச்சியில் அவர் பேசியது, நான் 10 வயதில் சபரிமலைக்கு சென்றவன், ஆந்திராவில் இருந்து நிறைய பேர் திருத்தணிக்கு போனதை நான் 14 வயதில் பார்த்தவன்.

அடுத்த 10 ஆண்டுகளில் நெற்றியில் விபூதி பூசுவதை கேள்வி கேட்பார்கள். இதை நான் 14 வயதிலேயே எதிர்கொண்டவன். காரணம் இந்துக்கள் மதச்சார்பற்றவர்கள்.

இதையும் படியுங்க: முன்னாள் முதலமைச்சர் கார் டயரில் சிக்கி தொண்டர் பலி… ஷாக் வீடியோ… ஜெகன் மோகன் மீது வழக்குப்பதிவு!

ஒரு கிறிஸ்துவர் கிறிஸ்தவராக இருக்கலாம், ஒரு இஸ்லாமியர் இஸ்லாமியராக இருக்கலாம் ஆனால் ஒரு இந்து இந்துவாக இருந்தாலே பரிச்சனைதான், ஒரு இந்து இந்துவாக இருந்துவிட்டடால் அவனை மதவானி என அழைப்பதுதான் போலி மதச்சார்பின்மை,

அரேபியாவில் இருந்து வந்த மதங்கள் குறித்து கேள்வி கேட்க முடியுமா? அதற்கான துணிச்சல் இருக்கா? அதனால்தான் சொல்கிறேன் சீண்டிப் பார்க்காதீர்கள் என கூறினார்.

Blue Sattai maaran

இவரது கருத்துக்கு எதிர் கருத்து பலர் கூறி வருகின்றனர். அந்த வகையில் சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் விமாசித்துள்ளார். உங்க டீயை உங்க மாநிலத்துலயும், வடநாட்டுலயும் போய் ஆத்துங்க தம்பி. அடிக்கடி இங்க வந்து மதவாத பஞ்ச் பேசாதீங்க. சுடுதண்ணிய புடிச்சி மூஞ்சில ஊத்துற டீ மாஸ்டர்கள் இங்க ஏராளம். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

  • actress kayadu lohar increased his salary double இதுதான் சரியான தருணம்-சமயம் பார்த்து உஷாராக சம்பளத்தை ஏற்றிய கயாது லோஹர்!