சுடுகாட்டுக்குள் கிடந்த சடலம்… விசாரணையில் சிக்கிய நண்பனின் மனைவி.. நெஞ்சை உலுக்கிய ஷாக் சம்பவம்!

Author: Udayachandran RadhaKrishnan
3 September 2025, 4:53 pm

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி ஆரணி ஆற்றின் கரையில் சுடுகாட்டை ஒட்டிய முட்புதரில் அனுப்பம்பட்டு பகுதியை சேர்ந்த கட்டுமான தொழிலாளி விமல் என்பவர் நேற்று வெட்டி படுகொலை செய்யப்பட்ட சடலமாக மீட்கப்பட்டார்.

இந்த சம்பவத்தில் அவருடைய நெருங்கிய நண்பர் சிவா உள்ளிட்ட ஐந்து பேரை போலீசார் தேடிவந்த நிலையில் சிவா, லட்சுமிகாந்தன், விஜி, விக்கி, பிரவீன் உள்ளிட்ட 5 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இதில் பல திடுக்கிடும் தகவல் வெளியானது. சிவாவின் மனைவியுடன் விமலுக்கு தகாத தொடர்பு இருந்துள்ளது. இருவரும் அடிக்ககடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர்.

இதை அறிந்த சிவா, விமலை அழைத்துச் சென்று மது போதையில் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து தலை மற்றும் கழுத்துப் பகுதியில் வெட்டி கொலை செய்து சுடுகாட்டில் முட்ப்புதரில் வீசியது விசாரணையில் தெரிய வந்தது.

The body lying in the crematorium... the wife of a friend caught up in the investigation

விசாரணைக்கு பின்னர் 5 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க உள்ளனர். கொலை செய்யப்பட்டு உயிரிழந்த விமல் மீது ஏற்கனவே மீஞ்சூர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் 2019ஆண்டு கொலை வழக்கு ஒன்றில் தொடர்புடையவர் என்பதும் குறிப்பிடத்தக்கது .

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!