புத்தகம் சுமக்க வேண்டிய சிறுவன் புட்டியை சுமக்கும் அவலம் : சிறுவனை மதுவிற்க தூண்டிய திமுக பிரமுகர்!!

Author: Udayachandran RadhaKrishnan
23 June 2021, 7:10 pm
Dmk Boy Sale Liquor - Updatenews360
Quick Share

திண்டுக்கல் : பள்ளி புத்தகங்களை சுமக்க வேண்டிய சிறுவன், ஆனா ஆவன்னா சொல்லும் வயதில் பிளாக்பேர்ல் என்று மதுபாட்டில்களின் பெயரைச் சொல்லி மதுவிற்பனை செய்யும் வீடியோவால் சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை தாலுகா கரிக்காலி பகுதிதியல் செட்டிநாடு சிமெண்ட் நிறுவனம் உள்ளது. இங்கே சிமெண்ட் ஏற்ற அடிக்கடி லாரிகள் வருவதால் லாரிகளில் உள்ள ஓட்டுநர்கள், உதவியாளர்கள், லோடு மேன்கள் மது அருந்துவது வழக்கம்.

இந்த நிலையில் செட்டிநாடு சிமெண்ட் நிறுவனம் எதிரே செயல்பட்டு வரும் தனியார் உணவகங்கள் அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் வசித்து வரும் ஒடு குடும்பத்தினர், அங்கு வரும் லாரி ஓட்டுநர்கள், லோடுமேன்களுக்கு மதுவிற்பனை செய்கின்றனர்.

இதில் என்ன கொடுமை என்றால், அந்த குடும்பத்தினரை சேர்ந்த சிறுவன், ஆனா ஆவண்ணா கூற வேண்டிய வயதில் பிளாக் ஃபியர்ல் கோட்டர் 200 ரூபாய் என கூறி விற்பனை செய்கிறார்.

இந்த அவலத்தை அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் வீடியோவாக எடுத்துள்ளனர். மேலும் இது குறித்து விசாரித்த சமூக ஆர்வலர்கள், அப்பகுதியில் உள்ள தனியார் விடுதி, கேளிக்கை விடுதிகளில் பார் வைத்துள்ளவர் திமுக பிரமுகர் சிவா என்றும், தற்போது தனியார் மதுபான கூடங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் இது போன்ற சம்பவத்தில் திமுக பிரமுகர் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

விடியல் ஆட்சி தருகிறோம் என கூறி ஆட்சியை பிடித்த திமுகவினரே இது போன்ற செயல்களுக்கு காரணமாக அமைவது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதுக்கெல்லாம் எப்ப விடியல் பிறக்குமோ என சமூக ஆர்வலர் புலம்புகின்றனர்.

Views: - 312

0

0