உயிருக்கு ஆபத்தான ‘செல்பி’ மோகம்: தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட சிறுவன்

Author: kavin kumar
7 November 2021, 9:24 pm
Quick Share

கள்ளக்குறிச்சி: சங்கராபுரம் அருகே உள்ள சிறுகலூர் அருவியில் செல்பி எடுக்க முயற்சித்த சுரேஷ் என்ற சிறுவன் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள சிறுகாலூர்அருவியில் சுரேஷ் , வெங்கடேசன்,பூமிநாதன்,சதீஷ்ஆகிய நான்கு சிறுவர்களும் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது திருவண்ணாமலை மாவட்டம் வாணபுரம் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் மகன் சுரேஷ் அருவியன் கீழே பாறையில் நின்று கொண்டு செல்பி எடுத்துக் கொண்டு இருந்தான்அப்போது கால் வழிக்கி தண்ணீரில் விழுந்த சுரேஷ் அப்போது அருவியில் அதிக தண்ணீர் கொட்டியதால் காற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டான். தகவலறிந்து சம்பவ இடத்திற்குவந்த கரியாலூர் போலீசார் சங்கராபுரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சிறுவனை சுமார் 5 மணி நேரத்திற்கு மேலாக தேடும் பணியில் தீயணைப்புத் துறையினரும், காவல்துறையினரும் ஈடுபட்டு வருகின்றனர். அருவியில் குளிக்கச் சென்ற நான்கு சிறுவர்களில் ஒருவன் தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Views: - 227

0

0