கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த காதலியின் மகனை துப்பாக்கியால் சுட்ட காதலன்: மருத்துவமனையில் மகன் சிகிச்சை: விசாரணையில் பிடியில் தாய்

11 June 2021, 6:32 pm
Quick Share

தருமபுரி: மாரண்டஅள்ளி அருகே தொட்டபடகாண்டஅள்ளியில் தாயின் கள்ளக்காதலன் சுட்டதில் மகன் படுகாயம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த மாரண்டஅள்ளி அருகே தொட்டபடகாண்டஅள்ளி கிராமத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளி முருகேசன் இவரது மனைவி சுசிலா. இவர்களது மகன் தினேஸ்குமார். நேற்று நள்ளிரவு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த தினேஸ்குமாரை வீட்டின் ஜன்னல் ஓரத்தில் மறைந்திருந்த மர்ம நபர் நாட்டு துப்பாக்கியில் சுட்டு தப்பி சென்றுள்ளனர். இதில் தினேஸ்குமாருக்கு கால் மற்றும் வயிற்று பகுதியில் பலத்த அடிப்பட்டதால் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார்.

அதனையடுத்து தருமபுரியில் இருந்து மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து தகவலறிந்து வந்த மாரண்டஅள்ளி காவல் துறையினர் விசாரணை செய்ததில் அதே பகுதியை சேர்ந்த விஜயகாந்த் என்பவருக்கும், தினேஸ்குமாரின் தாயார் சுசிலாவிற்கும், கடந்த சில வருடங்களாக தகாத உறவு இருந்துள்ளது. இதற்கு இடையூராக இருந்த தினேஸ்குமாரை கொலை செய்ய முடிவு செய்து விஜயகாந்த் கள்ளத்துப்பாக்கியை கொண்டு சுட்டது தெரியவந்தது. பின்னர் தலைமறைவான விஜயகாந்த் மீது வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

Views: - 121

0

0