சொத்து பிரச்சனையில் அக்காவின் கணவரை கொன்ற தம்பி : போலீஸ் விசாரணை…!!!
Author: kavin kumar1 February 2022, 7:03 pm
திருப்பூர் : திருப்பூர் அருகே சொத்து பிரச்சனையில் சொந்த அக்காவின் கணவரை, தம்பியே கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் தென்னங்கரைபாளையத்தை சேர்ந்தவர் செந்தில்குமார்(42).விவசாயி ஆன இவருக்கு சங்கீதா (32), என்ற மனைவியும் ஒரு மகன் மற்றும் ஒரு மகளுடன் வசித்து வந்துள்ளார். செந்தில்குமார் மற்றும் சங்கீதா ஆகிய இருவரும் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன் காதல் திருமணம் செய்துள்ளனர். இந்நிலையில் சங்கீதாவிற்கும், சங்கீதாவின் தம்பி தீபன் குமாருக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வந்துள்ளது. இதற்கிடையில் சங்கீதா வீட்டில் நாளை நடைபெற இருந்த விஷேசத்திற்கு உறவினர்களை அழைக்க செந்தில்குமார் அவரது மனைவி சங்கீதா இருவரும் சென்று விட்டு நேற்று இரவு இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்துள்ளனர்.
அப்போது தீபன் குமார் அவரது அக்கா சங்கீதா மற்றும் அவரது கணவரிடம் சொத்து தொடர்பாக வாக்குவாதம் செய்துள்ளார். ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த தீபன்குமார் அவரது அக்காவின் கணவரை தாக்கியுள்ளார். இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த செந்தில்குமாரின் தலையில் அருகே கிடந்த கல்லை போட்டு கொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டார். இது குறித்து செந்தில்குமாரின் மனைவி சங்கீதா ஊதியூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் தீபன் குமாரை தேடி வருகின்றனர்.
0
0