தெரு தெருவாக செருப்பு மாலை அணிந்து வாக்கு சேகரித்த வேட்பாளர் : பரபரப்பை கிளப்பிய பிரச்சாரம்!

Author: Udayachandran RadhaKrishnan
4 April 2024, 2:28 pm

தெரு தெருவாக செருப்பு மாலை அணிந்து வாக்கு சேகரித்த வேட்பாளர் : பரபரப்பை கிளப்பிய பிரச்சாரம்!

தமிழகத்தில் கவர்ச்சிகரமான தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசி தேர்தலை சந்திக்கும் பல கட்சிகள் இருந்தாலும் கள்ளக்குறிச்சி மாவட்டம் பாண்டூர் கிராமத்தை சேர்ந்தவர் அரசன் (79) என்பவர் நடைபெறவுள்ள லோக்சபா தேர்தலில் விழுப்புரம் லோக்சபா (தனி) தொகுதியில் போட்டியிடுகிறார்.

சுயேச்சை வேட்பாளரான இவருக்கு செருப்பு சின்னம் வழங்கப்பட்டுள்ளது. அதனையொட்டி இவர் இன்று செருப்பு மாலை அணிந்தபடி கையில் படத்துடன் பொறிக்கப்பட்ட பதாகை உடன் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள டீ கடை பிரியாணி கடை என அங்கிருக்கும் கடைகளில் செருப்பு சின்னத்திற்கு வாக்களிக்கும் படி பிரசாரம் மேற்கொண்டு ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது ஒரு சிலர் இவருடன் சேர்ந்து புகைப்படமும் எடுத்துக் கொண்டனர் ஒரு சிலர் வேட்பாளரிடம் இந்த செருப்பு மாலையை கழட்டுங்கள் நிச்சயம் உங்களுக்கு ஓட்டு போடுகிறோம் என்று கூறினர்.

ஆனால் அவர் எனக்கு கொடுத்திருக்கும் சின்னத்தை தான் மக்கள் மத்தியில் கொண்டு செல்ல பயன்படுத்துகிறேன் இதில் ஒன்றும் தவறில்லை என்று மீண்டும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் நீதிமன்ற வளாகம் அருகே வேட்பாளர் செருப்பு மாலை அணிந்து பிரசாரம் மேற்கொண்டதால் பெரும் பரபரப்பு நிலவியது.

இவர் உள்ளாட்சி, சட்டசபை மற்றும் லோக்சபா என அனைத்து வகை தேர்தல்களிலும் சுயேட்சையாக இதுவரை 14 ஆவது தடவையாக போட்டியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

  • enforcement department raid on allu aravind house பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை?