பிரபல ரவுடி வெட்டிப் படுகொலை செய்த விவகாரம்.. காட்டிக் கொடுத்த சிசிடிவி : 5 பேர் கைது!

Author: Udayachandran RadhaKrishnan
4 July 2024, 12:59 pm

வேலூரில் பல்வேறு கொலை கொள்ளை ஆள் கடத்தல் வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி எம்.எல்.ஏ ராஜா (எ) ராஜ்குமார் (43) அரியூர் பகுதியில் வசித்து வந்தார் நேற்று முன்தினம் ஒரு வழக்கில் வேலூர் நீதிமன்றத்தில் ஆஜராகி இரவு வீட்டிற்கு செல்லும் வழியில (Honda Activa ) தனது இருசக்கர வாகனத்துடன் அரியூர் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தபோது KA-05-6048 பதிவெண் கொண்ட காரில் வந்த அரியூர் பகுதியைச் சேர்ந்த தேஜாஸ், அஜித்குமார், ராஜேஷ், சந்துரு, கார்த்திகேயன் ஆகியோர் ரவுடி எம்எல்ஏ ராஜாவை சரமாரியாக தலையில் கத்தியால் வெட்டியதில் சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.

குற்றவாளிகள் அனைவரும் அதே காரில் ஏறி தப்பிச் சென்றனர். உடனடியாக தகவல் அறிந்து அங்கு வந்த வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் நேரில் விசாரணை மேற்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து அரியூர் போலீசார் ராஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் எம்எல்ஏ ராஜாவின் இறுதிச்சடங்கு நேற்று முடிவடைந்தது இந்த நிலையில்

மேலும் உடனடியாக கொலை செய்தவர்களை தேடினர் காரில் தப்பிச்சென்ற அனைவரையும் வேலூர் தாலுக்கா காவல் ஆய்வாளர் சுபா தலைமையிலான போலீசார் கணியம்பாடி அருகே 5 பேரை கைது செய்து விசாரித்து வந்தனர்

கைது செய்யப்பட்ட தேஜாஸின் உறவினர் காமேஷ் என்பவரை கடந்த 2020 ஆம் ஆண்டு எம்எல்ஏ ராஜா கொலை செய்த முன்விரோதம் காரணமாக வெட்டியதாக தெரியவந்துள்ளது

மேலும் கைது செய்யப்பட்ட ஐந்து பேரையும் நீதிமன்ற காவலுக்கு அழைத்து சென்று வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

இறந்த ராஜா (எ) MLA ராஜா மீது கொலை, வழிப்பறி, கொலை முயற்சி உள்ளிட்ட சுமார் 20 மேற்பட்ட வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்பொழுது ரவுடி எம்எல்ஏ ராஜா (எ) ராஜ்குமாரை சரா மாறியாக வெட்டி கொலை வெறி தாக்குதல் நடத்தி தப்பிச்செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!