சுயேட்சை வேட்பாளர்கள் சின்னத்தை வெளியிட்ட மத குருக்கள்..! புதிய முயற்சி என பெருமிதம்!!

Author: Udayachandran RadhaKrishnan
24 March 2021, 5:25 pm
Cbe Independent Candidate - Updatenews360
Quick Share

கோவை: கோவையில் சுயேட்சை வேட்பாளர்களின் தேர்தல் சின்னத்தை மத குருக்கள் இன்று வெளியிட்டனர்.

கோவையை சார்ந்து செயல்படும் தேன்கூடு தன்னார்வ அமைப்பினர் இந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளனர். அதன்படி, கோவை தெற்கு, கோவை வடக்கு மற்றும் மேட்டுப்பாளையம் தொகுதிகளில் தேன்கூடு அமைப்பினர் போட்டியிடுகின்றனர்.

இந்தநிலையில், வேட்பாளர்கள் அறிமுக நிகழ்ச்சி இன்று ரேஸ்கோர்ஸ் பகுதியில் இன்று நடைபெற்றது. இதில் இந்து, கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய மத குருக்கள் கலந்து கொண்டு சுயேட்சை வேட்பாளர்களின் சின்னத்தை வெளியிட்டனர்.

இது குறித்து சுயேட்சை வேட்பாளரான வழக்கறிஞர் சுந்தரவடிவேலு கூறுகையில், “நான் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறேன். பல வழிகளில் மக்களுக்கு காலங்காலமாக நன்மைகள் செய்து வருகிறோம். முக்கோண சின்னத்தில் போட்டியிடுகிறோம். எல்லா மதமும் சம்மதம், ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்பது தான் இந்த சின்னத்தின் பிரதிபலிப்பு. இது ஒரு புதிய முயற்சி. வரும் காலத்தில் தமிழகம் மற்றும் இந்தியா முழுவதும் போட்டியிடுவோம்.” என்றார்.

Views: - 73

3

0