வீட்டு மனை பிரச்சனை….ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சித்த முதியவரால் பரபரப்பு…!!!

By: Aarthi
6 October 2020, 5:20 pm
collector iffice - updatenews360
Quick Share

கிருஷ்ணகிரி: வீட்டுமனை பிரச்சனையை தீர்க்க கோரி ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயற்சித்த முதியவரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உள்ள சாணசந்திரம் கிராமத்தை சேர்ந்தவர் வேதநாயகம். 63 வயதான இவர் அங்குள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் வீடு கட்டி மனைவியுடன்  வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் இவர்களது வீட்டின் அருகில் வசிக்கும்  கார்த்திக் என்பவர் வேதநாயகம் குடும்பத்தினருக்கு இடையூறு ஏற்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஓசூர் காவல் நிலையம், வட்டாட்சியர் அலுவலகம், சார் ஆட்சியர் அலுவலகம் ஆகியவற்றில் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று முதியவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்த வேதநாயகம், தான் கொண்டு வந்திருந்த மண்ணெண்ணையை தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி  மீட்டனர்.

Views: - 59

0

0