வாகன சோதனையின் போது ஆய்வாளரை தாக்கி தப்பியோடிய குற்றவாளி.. துப்பாக்கியால் சுட்ட போலீசார்.. பரபரப்பு!

Author: Udayachandran RadhaKrishnan
17 August 2024, 1:29 pm

காவல் துறை வாகன சோதனையின் போது பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளி காவல் சார்பு ஆய்வாளரரை தாக்கி விட்டு தப்ப முயன்ற போது சுட்டு பிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

இன்று காலை வாகன சோதனையில் காளையார் கோவில் போலீசார் ஈடுபட்டபோது காரில் வந்த பல குற்ற வழக்குகளில் தொடர்புடைய அகிலன் என்ற குற்றவாளியை சோதனை செய்தபோது அவர் வாகனத்தில் வைத்திருந்த ஆயுதங்களை வைத்து குகன் என்ற சார்பு ஆய்வாளரை தாக்கி தப்ப முயன்ற போது காளையார் கோவில் காவல் ஆய்வாளர் ஆடிவேல் சுட்டுப் பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

சுடப்பட்ட குற்றவாளி அகிலன் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதல் சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது மதுரை ராஜாஜி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

சிவகங்கையில் கடந்த ஒரு மாதத்தில் இரண்டு குற்றவாளிகள் சுட்டுப் பிடிக்கப்பட்ட சம்பவம் குற்றவாளிகள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

  • ajith kumar talking about quit cinema in interview after lonng time சினிமாவுக்கு டாட்டா! எப்போவேணாலும் நடக்கலாம்? பேட்டியில் அதிர்ச்சியை கிளப்பிய அஜித்…