காங்., எம்பியிடம் நகை பறித்த குற்றவாளி கைது… 4 சவரன் நகையும் பறிமுதல்..!!!
Author: Udayachandran RadhaKrishnan6 August 2025, 11:33 am
மயிலாடுதுறை காங்கிரஸ் எம்.பி. சுதா, தமிழக அரசின் பொதிகை இல்லத்தில் தங்கியிருந்தபோது, அவரது 4 பவுன் தங்கச் சங்கிலி பறிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
நேற்று முன்தினம் காலை 6 மணியளவில், வழக்கம்போல நடைபயிற்சிக்கு சென்ற சுதா, மாநிலங்களவை எம்.பி. கவிஞர் சல்மாவுடன் தமிழ்நாடு இல்லம் அருகே உள்ள போலந்து தூதரகம் முன்பு சென்று கொண்டிருந்தார்.
அப்போது, ஹெல்மெட் அணிந்த மர்ம நபர் ஒருவர் ஸ்கூட்டரில் வந்து, எம்.பி. சுதாவின் கழுத்தில் இருந்த 4 பவுன் தங்கச் சங்கிலியை பறித்து விட்டு சாவகாசமாக தப்பிச் சென்றார். உடனடியாக அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.
மற்றொரு எம்.பி.யின் உதவியுடன் புகார் பதிவு செய்யப்பட்டு, விசாரணை தொடங்கியது.இந்நிலையில், தீவிர விசாரணையை மேற்கொண்ட டெல்லி காவல்துறை, நகையை பறித்த குற்றவாளியை கைது செய்துள்ளது. மேலும், திருடப்பட்ட 4 பவுன் தங்கச் சங்கிலியையும் காவல்துறையினர் மீட்டுள்ளனர். இந்தச் சம்பவம் தலைநகரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், காவல்துறையின் விரைவான நடவடிக்கை பாராட்டைப் பெற்றுள்ளது.
