தீராத சந்தேக வெறி… சிறுவனுக்கு 19 இடங்களில் சூடு வைத்த கொடூர தந்தை..!!

Author: Udayachandran RadhaKrishnan
2 September 2025, 2:25 pm

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே ஒரத்தூர் மேலத்தெரு சேர்ந்தவர் ராஜ் கண்ணன். இவர் சென்னையில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி உமா இவரது 10 வயது மகன் அமுதன் ஆகியோர் ஒரத்தூர் கிராமத்தில் வசித்து வந்தனர்.

இந்நிலையில் ராஜ்கண்ணன் தாயார் வரதட்சனை கேட்டு மருமகள் உமாவை அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளார். இதனை பார்த்த ராஜ்கண்ணன் தனது மனைவி மற்றும் மகன் ஆகியோரை சென்னைக்கு அழைத்துச் சென்று அங்கேயே ஒரு தனியார் பள்ளியில் மகனை படித்து வைத்துள்ளார் .

ராஜ்கண்ணன் தனது மனைவியை சந்தேகப்பட்டு தொடர்ந்து அடித்து துன்புறுத்தி வந்துள்ளார் . மனைவி மீது சந்தேகபட்டு தனது மகன் அமுதனை தோசை கரண்டியில் சூடு வைத்து மகன் அமுதன் உடம்பில் 19 இடத்தில் சூடு வைத்துள்ளர்.

The cruel father who burned the boy in 19 places

இதனால் அமுதன் துடி துடித்து கதறியுள்ளார் இதனைப் பார்த்து தாய் கதறி அழுது தனது மகனை பலத்த காயங்களுடன் அழைத்துக்கொண்டு சென்னையில் இருந்து புறப்பட்டு சொந்த கிராமத்திற்கு வந்து மன்னார்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

பலத்த காயங்களுடன் அமுதன் சிகிச்சை பெற்று வருகிறார். மனைவி மீது கொண்ட சந்தேகம் காரணமாக தனது மகனை 19 இடத்தில் தீயால் சுட்ட தந்தையால் பலத்த தீக்காயங்களுடன் மகன் அமுதன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் மன்னார்குடி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!